இன்பநிலை வெகுதூரமில்லை

என்றும் துன்பமில்லை, இனிச் சோக மில்லை
பெறும் இன்பநிலை, வெகுதூர மில்லை
இனி வஞ்சமும் பஞ்சமு மில்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைக ளில்லை
கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலை யில்லை

எங்கள் வாழ்வினில் துயர்வரப் பாதையில்லை
என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை
நம் வாழ்வினில் துயர்வரப் பாதையில்லை
என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை

அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலைபாயுது ஆசைகள் கோடி
என்னை வாவென்று தாவிடும் பாசக்குரல்
வந்து வாழ்ந்திடும் போற்றிடும் நேசக்குரல்

என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை
பெறும் இன்பநிலை வெகுதூர மில்லை
இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்
வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம் (இங்கு)

இனி செல்கின்ற தேசத்தில் பேதமில்லை
கொடும் தீமை பொறாமை விரோதமில்லை
என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை
பெறும் இன்பநிலை வெகுதூர மில்லை


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:57 pm)
பார்வை : 106


பிரபல கவிஞர்கள்

மேலே