பள்ளம் மேடுள்ள பாதையிலே...

பள்ளம் மேடுள்ள பாதையிலே
பாத்து நடக்கணும் காளைகளே!
பழைய போக்கிலே பயனிலை - நல்ல
விஷயமிருக்கணும் மூளையிலே (பள்ள)

நல்லவர் செய்த செயல்களிலே - பயிர்
நடனமாடுது வயல்களிலே - அது
நெல்லுகதிராகி முதிரும் நாளிலே
நிலமுதலாளிகள் கையிலே - போய்
நிறைந்திடும் மார்கழித் தையிலே (பள்ள)

வல்லமையோடு வாழ்ந்திடும் எளியோர்
வாடிக்கைக் காரர் நாட்டுக்கு - பலர்
வாடுவதுண்டு சோற்றுக்கு - ஆனால்
மாடுகளே உங்க பாடுதேவலே
வைக்கோல் வந்திடும் வீட்டுக்கு (பள்ள)

உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது;
ஒற்றுமையில்லா மனித குலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது (பள்ள)

பச்சைக் கொடிகள் வேலியிலே
பாகு பாடின்றித் தழைக்குது - அதைப்
பார்த்திருந்தும் சில பத்தாம் பசலிகள்
பக்கம் ஒண்ணாய்ப் பறக்குது - அன்புப்
பாலம் பழுதாய் கிடக்குது (பள்ள)


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:58 pm)
பார்வை : 104


பிரபல கவிஞர்கள்

மேலே