அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 11:15 am)
பார்வை : 35


மேலே