ஏஞ்சோ வந்தான் வென்றான்

மின் நிலவிவள் - ஒரு
வெண் ஒளித்திரள்
கண்கள் சிமிட்டிடும் - அந்த
நியுயார்க் சிலையிவள் - Yo!

ஏஞ்சோ - லூவ்லீ ஏஞ்சோ…. ச்சீஸீ ஏஞ்சோ…

ஏஞ்சோ - ஒரு பனித்துளிப் பதுமையோ?
ஏஞ்சோ - ஒரு புதுவகைப் புதுமையோ?

இவள் தும்பியோ ஒரு தும்பையோ?
ஜீன் டாப்ஸிலே ஒரு பெப்ஸியோ?
கேட்வாக்கிடும் பூ மூட்டையோ
ஸ்விட்ச்சில்லா ஒரு ரேடியோ

ஹே… வீனை மேலே பூனை போலே 
பூமி மேலே வந்தாளோ?
ஹே… மௌனம் இல்லா நாணம் இல்லா 
ஊனம் கொண்டே வந்தாள்

ஒரு வேளை… திருவாயை…. 
திறவாமல்…. இருந்தாலே...
இவள் அமைதிக்கு நோபல் தர 
உலகமே முடிவெடுக்கும்

ஹே ஏஞ்சோ…
நீ விண்மீனின் பிஞ்சோ
ஹே ஏஞ்சோ...
நீ கொஞ்சும் மென் பஞ்சோ

இவள் விழிக் கூரில்
தினந்தினம்
கிழிபடும் நூறு
இருதயம்
ஆடை மோதி ஊரில் பாதி
அவதியில் அலைகிறதோ

ஹே… பற்பசைக்கு மாடல் போலே
தான் சிரித்து வந்தாளோ…
ஹே வேற்றுக் கிரக பூவைப் போலே
வான் குதித்து வந்தாள்

நெப்ட்யூனே... என்றாலும்….
பண்டோரா… சென்றாலும்…
இவள் அழகுக்கு நிகர் என
அகிலத்தில் உயிர் இல்லையே!

ஹீப்ரூ லத்தீனக் கவிதைகள்
eyebrow மொழியோடு தோற்றிடும்

Ballet Flamenco நடனங்கள்
பாவை விழியோடு தோற்றிடும்

opera jazz எல்லாம்
இவள் பேச்சில் தோற்றிடும்

செங்காந்தள் ஆம்பல்
ஊதா ரோஜா நொச்சிப் பூவும்
இவள் மூச்சில் தோற்றிடும்

ஓரு ஊஞ்சல் ஏஞ்சல் ஏஞ்சோ….!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:59 pm)
பார்வை : 0


மேலே