திறந்தேன் திறந்தேன் வந்தான் வென்றான்

திறந்தேன் திறந்தேன் நீ முட்டித் திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ மூட்டத் திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளச் சில்லெல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்கத் திறந்தேன்

தொலை தொலை என எனை
நானே கேட்டுக்கொண்டேனே
என் மமதையினை!

நுழை நுழை உனை என
நானே மாற்றிக்கொண்டேனே
என் சரிதையினை!

துளையேதும் இல்லாத தேன் கூடோ
நுழைவேதும் இல்லாத ஊன் காடோ
விளைவேதும் இல்லாத மாநாடோ
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய் தானோ?

முகத்திரை திருடினாய்
திரைக் கதைப்படி
அகத்தினை வருடினாய்
அதைக் கடைப்பிடி

பெண்ணே உன்னைத் துறவி என்றுதான்
இன்னாள் வரை குழம்பிப் போயினேன்

துறவறம்
துறக்கிறேன்

துளையேதும் இல்லாத தேன் கூடோ
நுழைவேதும் இல்லாத ஊன் காடோ
விளைவேதும் இல்லாத மாநாடோ
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய் தானோ?

உரிமைகள் வழங்கினேன்
உடை வரை தொடு
மருங்குகள் மீறியே
மடை உடைத்திடு

ஓராயிரம் இரவில் சேர்த்ததை
ஓரீர் நொடி இரவல் கேட்கிறாய்!

பொறுமையின்
சிகரமே!

துளையேதும் இல்லாத தேன் கூடோ
நுழைவேதும் இல்லாத ஊன் காடோ
விளைவேதும் இல்லாத மாநாடோ
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய் தானோ?


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:41 pm)
பார்வை : 0


மேலே