சந்திக்காத கண்களில் இன்பங்கள் 180

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப்போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப்போகிறேன்

அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்

ஊகம் செய்தேனில்லை
மோகம் உன் மீதானேன்

கதைகள் கதைகள் கதைத்து
விட்டுப் போகாமல்?
விதைகள் விதைகள் விதைத்து
விட்டுப் போவோமே

திசையறியா பறவைகளாய்
நீ நான் நீள் வான்
வெளியிலே... மிதக்கிறோம்

போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதா?

இணையும் முனையம் இதயம்
என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ

முடிவறியா
அடிவானமாய்
ஏன் ஏன் நீ… நான்…
தினந்தினம்
தொடர்கிறோம்?


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:23 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே