சொன்னது நீதானா

சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா.....சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே

இன்னொரு கைகளிலே நான் யார் யார் நானா
எனை மறந்தாயா ? ஏன் ஏன் ஏன் என்னுயிரே
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே

மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே - இன்று
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா
சொன்னது நீதானா.... சொல் சொல் சொல் என்னுயிரே

கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 2:48 pm)
பார்வை : 175

பிரபல கவிஞர்கள்

மேலே