ஏன் பிறந்தாய் மகனே

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

மண் வளர்த்த பொறுமையெல்லாம் மனதில் வளர்த்தவளாய்
கண்மலர்ந்த பொன்மயிலை நானடைந்தேன்
நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை
தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே
நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை
தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே

ஆராரோ ஆரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ ஆரிரரோ


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 2:53 pm)
பார்வை : 142


பிரபல கவிஞர்கள்

மேலே