அழகிய தமிழ்மகள் இவள்

ஆணிப்பொன் தேர்கொண்டு
மாணிக்கச் சிலையென்றுவந்தாய் நின்றாய் இங்கே....
காணிக்கைப் பொருளாகும் காதல் என் உயிராகும்
நெஞ்சை தந்தேன் அங்கே...

அழகிய தமிழ்மகள் இவள் -
இருவிழிகளில் எழுதிய மடல் -
மெல்லமொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்

வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
நீலவிழிப் பந்தல் நீயிருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூதுவிடும் ஜாடை

இளமையில் இனியது சுகம் -
இதைப்பெறுவதில் பலவித ரகம் -
இந்தஅனுபவம் தனியரு விதம்
மலரும் வளரும் பல நாள் தொடரும்

பாலில் விழும் பழம் எனும்
போதை பெறும் இளம் மனம்
அள்ளத்தான் அள்ளிக் கொள்ளத்தான்.
.காதல் நிலா முகம் முகம்
கண்ணில் உலா வரும் வரும்
மெல்லத்தான் நெஞ்சைக் கிள்ளத்தான்

கொடியிடை விளைவது கனி - அந்த
கனியிடை விளைவது சுவம் -
அந்தசுவை பெற நமக்கென்ன குறை
நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்

பாவை உனை நினக்கையில்.
.பாடல் பெறும் கவிக்குயில்
பக்கம் வா.. இன்னும் பக்கம் வா
கோவை இதழ் இதோ இதோ
கொஞ்சும் கிளி அதோ அதோ.
.இன்னும் நான் சொல்ல.
..இன்னும் நான் சொல்ல.. வெட்கம்தான்....

மழை தரும் முகிலென குழல் -
நல்லஇசை தரும் குழலென குரல் -
உயிர்ச்சிலையென உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன்
மலர் போல பறித்தேன்


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 4:46 pm)
பார்வை : 137


பிரபல கவிஞர்கள்

மேலே