எல்லை மீறித் துள்ளாதே

எதிரிக்கு எதிரி சாட்டையடி,
எல்லாம் இவரின் வேட்டையடி;
கதறும் குரலே கீதமடி - இது
அதிசய ராஜா காலமடி! (எதிரிக்கு)

வளரும் உல்லாச நிலையம் என்னாளும்
மகிழும் மனம்தானே - பெண்
அழகினிலே தன் விழிகளை வீசும்
கலைஞன் இவர்தானே! - பலர்
ஆசைகொண்டு தேடி - இன்ப
வாசமலரோடு வந்து
காணுகின்ற முகந்தானே - இனி
ஆனந்த சுகந்தானே - இவர்
அடைவது நிஜந்தானே! (எதிரிக்கு)

பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல்
பகையை வளர்த்தாலே - இவர்
பார்வையிலே உன் வீரமும் பலமும்
பறந்திடும் பொடி போலே! - மிக
நல்லவளைப் போலிருந்து
குள்ள நரியாய் நடந்து
எல்லை மீறித் துள்ளாதே! - இந்த
இடந்தனில் செல்லாதே! - இவர்
குணந்தான் பொல்லாதே! (எதிரிக்கு)


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:56 pm)
பார்வை : 127


பிரபல கவிஞர்கள்

மேலே