ஓடோ ஓடோ ஓடோடி போறேன் - கண்டேன் காதலை

ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்

ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்
கனவெல்லாம் விரலோடு
உலகெல்லாம் அழகோடு
இனி எல்லாம் அவனோடு
பூவாகும் தார் ரோடு
காற்றாகும் தார் ரோடு
மாற்றங்கள் வேரோடு
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ..)

ஹே என் பாத சிறகே
நீ என் முளைத்தாய் கேட்காமல் என்னை
ஹே என் மன சிறையே
நீ என் திறந்தாய் கேட்காமல் என்னை
ஒற்றை பின்னல் அவனுக்காக
நெற்றி போட்டும் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னை கேட்காதே
இதழின் ஈரம் அவனுக்காக
மனதின் பாரம் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னை கேட்காதே
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ...)

ஹே நீ சிரிப்பது ஏன் நீ நடிப்பது ஏன்
கேட்காதே என்னை
ஹே நீ கொதிப்பது ஏன் நீ மிதப்பது ஏன்
கேட்காதே என்னை
தானே பேசி நடக்கும் போதும்
(அவனுக்காக)
காற்றை முத்தம் கொடுக்கும் போதும்
(அவனுக்காக)
எனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே
கன்னம் சிவந்து நிற்கும் போதும்
(yeah yeah)
பற்றி கொண்டு கத்தும் போதும்
(oh yeah)
எனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ...)


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 11:34 am)
பார்வை : 0


மேலே