போயும் போயும் சேட்டை

போயும் போயும் இந்தக் காதலுக்குள்ளே,
நீயும் நீயும் எனைத் தள்ளி விட்டாயே!
மாயம் ஒன்றில் என்னைச் சுழல வைத்தாய்.
என் இதயம் சிரிக்க வைத்தாய்.

பெண்ணே! நீ வந்ததால்,
என் நாளை ஒன்று
இன்றே இன்றே வந்ததே!
பெண்ணே! நீ சென்றதும்,
என் தென்றல் கூட
அன்றே அன்றே நின்றதே!

காதலில் மீமிகை
யாவுமே மூலிகை!
ஏங்கிடும் காரிகை நானே...!

நாழிகை யாவிலும்
புன்னகை சேர்க்க வா!

என் காயம் எல்லாம்
நீ ஆறச் செய்தாய்.
நான் உன்னாலே வேறொரு
பெண்ணாய் மாறினேன்!

பெண்ணே! நீ வந்ததால்,
என் நாளை ஒன்று
இன்றே இன்றே வந்ததே!
பெண்ணே! நீ சென்றதும்,
என் தென்றல் கூட
அன்றே அன்றே நின்றதே!


  • கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து
  • நாள் : 2-May-14, 3:05 pm
  • பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே