மண்ணடச்ச பந்து கௌரவம்

மண்ணடச்ச பந்து தெச்சான்
பந்து மேல புள்ளி வெச்சான்
புள்ளிக்குள்ள உன்ன என்ன
நிக்கவெச்சு சுத்த வெச்சான்

உசுரு மொளச்சு வர
தண்ணி கொஞ்சம் ஊத்தி வெச்சான்
மசுர கலச்சு விட
காத்து அதில் ஊதி வெச்சான்

அவனுக்கு பொழுது போக
இவிங்கள அவன் படச்சான்
அவனையே கொழப்பிப் போட
கடவுள இவன் படச்சான்

அடுத்து என்ன நடக்குமின்னு
கணக்கு ஒண்ணு இருக்கு!
தடுத்து மாத்த நெனைக்குறவன்
தலையில் ஏறும் கிறுக்கு!

இவன பாத்தியே -
யாருன்னு கேட்டியே!
மனசுக்கு மூடியே -
இவனுக்கு இல்லியே!
எதையோ தேடியே -
அலையுறான் வாடியே!

வரவே கூடாதவன்
கூடாரத்த போடுறான்
உலகம் பாக்காதவன்
கண்ண கட்டி ஆடுறான்

இவனுக்கு சோலி ஒண்ணு
இப்போ கண் தொறந்திருக்கு
இவனுக்கு சோடி ஒண்ணு
உள்ளூரில் பொறந்திருக்கு

அடுத்து என்ன நடக்குமின்னு
கணக்கு ஒண்ணு இருக்கு!
தடுத்து மாத்த நெனைக்குறவன்
தலையில் ஏறும் கிறுக்கு!

இவள பாத்தியா -
இவ கத கேட்டியா
வெளுப்பா மின்னுவா -
அழகள்ளி வீசுவா
கருப்ப மாட்டுனா -
பொய்யி கொஞ்சம் பேசுவா

எதுக்கும் அஞ்சாதவ
சிங்கம் போல பாயுவா
மனசுக்கு பட்டா அவ
உண்ம பக்கம் சாயுவா

இவகிட்ட காதல் சொல்ல
யாருக்கிங்க தில்லிருக்கு?
அதுக்குத்தான் ஊருக்குள்ள
காள ஒண்ணு நொழஞ்சிருக்கு

அடுத்து என்ன நடக்குமின்னு
கணக்கு ஒண்ணு இருக்கு!
தடுத்து மாத்த நெனைக்குறவன்
தலையில் ஏறும் கிறுக்கு!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:07 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே