என் செய்தாயோ

என் செய்தாயோ விழியே

இது என் செய்வாயோ விதியே

ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை

பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை

பிள்ளையில் பாதை தெளிவாக இல்லை விதியேஒரு சொந்தம் இல்லாத தந்தை

சுய பந்தம் இல்லாத அன்னை

இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே

விதை மண்ணில் முளைகொண்ட போதே

அதன் தலையில் இடி வீழ்ந்ததென்ன

இனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியே


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:48 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே