வருந்தி அழைத்தாள்

கொஞ்சும் -- கிளிக்கும்கொப் பளிக்கும்என் காது!
நில -- வொளிக்கும் தத்தளிக்கும் இம் மாது!

தென்றல் -- தெளிக்கும் கனலைஎன் மேலே
மிகப் -- புளிக்கும், இனிக்கும் பசும் பாலே
அதோ -- விளிக்கும் நெருங்கி எனைச் சாவே
நான் -- களிக்க வருக என்ஐயாவே!

பூத் -- துளிக்கும் தேனும்படு வேம்பு
நான் -- குளிக்கும் புனலும் கொடும் பாம்பு
வந்து -- சுளிக்கும் முகத்தைஎன் வாழ்வே
நான் -- சுளிக்க வருக என்ஐயாவே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 6:52 pm)
பார்வை : 21


மேலே