மௌனங்களின் நிழற்குடை!!

'கண்ணாமூச்சி
விளையாட்டு காட்டுகிறது
இந்த காதல்
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
ஒளித்து வைத்துக்கொண்டு.'
'நவீன ஓவியத்தை போல
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பொருளை உணர்த்துகிறது
உன் புன்னகை.'
'சாலையின்
ஒரு பகுதியில் நீ
மறுபகுதியில் நான்
ஊர்திகளின் நெரிசலில் சிக்கி
பாவம்
இந்த காதல்.'

என்று - எல்லாக் காதல்களையும் போலவே புலம்பலோடுதான் ஆரம்பிக்கிறது இவரது காதலும்.
ஆனால் - அரும்பிய காதல் மொட்டாகிவிட்டதென்பதை -

'உன்
பொய்க் கோபம் பற்றி
எனக்குத் தெரியாதா..
கிள்ளியவனென்பதற்காக
மணம்
வீசவா மறுக்கும் மல்லிகை?'

என்ற காதலனின் கேள்வி காட்டிக் கொடுத்து விடுகிறது.


  • கவிஞர் : மு. மேத்தா
  • நாள் : 29-Feb-12, 3:30 pm
  • பார்வை : 46

பிரபல கவிஞர்கள்

மேலே