ஆகாயத்துக்கு அடுத்த வீடு. ப.74

தாய்/பெட்டியை மேலே வைத்தான்/சிறிய பெட்டியைப்
புகை வண்டியின்/இருக்கைக்குக் கீழே
இழுத்துத் தள்ளினான்/தோள் பையைக் கம்பியில்
தொங்க விட்டான்/கனமாய் இருக்கிறதென்று
கைப்பையைக் கழற்றினான்../கையில் பிடித்திருந்த
பத்திரிக்கையைக் கூடப்/பக்கத்தில் வைத்தான்
நெட்டி முறித்து/நிமிர்ந்தான்...
எதிரே/இடதுதோளிலும்/வலது தோளிலும்
இடுப்பிலும்/மாற்றி மாற்றி
வைத்ததன்றி/தன் குழந்தையைக்/கீழே
இறக்கி வைக்காத/தாயைப் பார்த்துத்
தலை குனிந்தான்


கவிஞர் : மு. மேத்தா(2-Nov-11, 2:21 pm)
பார்வை : 152


மேலே