பல்வகைப் பாடல்கள் வள்ளிப் பாட்டு (2)

ராகம் -- கரஹரப்பிரியை
[தாளம் -- ஆதி]

பல்லவி
உனையே மயல் கொண்டேன், -- வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்!


சரணங்கள்

எனையாள்வாய், வள்ளீ, வள்ளீ!
இளமயிலே, என் இதய மலர்வாழ்வே,
கனியே, சுவையுறு தேனே,
கலவியி லேஅமு தனையாய்! -- கலவியிலே

தனியே - ஞான விழியாய்! நிலவினில்
நினைமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயாகிட வே வந்தேன்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 12:25 pm)
பார்வை : 0


மேலே