என் பெயர் பஞ்சம்

என் பெயர் பஞ்சம்

என்னை பற்றி ,
நான் எங்கும் இருக்கிறேன் ....

என்னை பற்றி கேட்டறிந்த சில ,
காடு இல்லை ...
மலை இல்லை ....
விவசாயம் இல்லை...
மழையும் இல்லை ...
செல்வம் இல்லை ...
செழிப்பும் இல்லை...
நான் இருக்கிறேன் !!
என் பெயர் பஞ்சம் !!


சிந்தனை பல ,
புதியவை வந்தது கோடி
அதற்காக இழந்தது கோடான கோடி
என்னால் வந்தது !!
என் பெயர் பஞ்சம் !!


இழந்தவை சில ,
இயற்கை இல்லை
பாசம் இல்லை
பரிதவிப்பும் இல்லை
பரிகாசம் வார்த்தையில் மட்டும்
பாசாங்கு எங்கும் உண்டு
என்னை போல !!
என் பெயர் பஞ்சம் !!


ஏத்தம் இறைக்கும்
காலமெல்லாம் மலையேறி போச்சு ...
மாடு கொண்டு
உழுததெல்லாம் காணாமல் போச்சு ....
மண் புழு பெயரெல்லாம்
மக்கியே போச்சு .........
பூச்சு தின்னும் குருவியெல்லாம்
பறந்தே போச்சு .......
பூச்சு விரட்ட பூச்சு கொல்லி ,
கடைசியில் விவசாயம் போச்சு......
காலம் மாறி போச்சு !!
என் பெயர் பஞ்சம் !!


இன்னும் இழக்க என்னடா ?
எல்லாம் போச்சு உயிர் இருக்கு
அந்த உயிரும் பஞ்சத்தால் செழிக்கிறது !!!


பஞ்சம் ஒன்று இல்லை என்றால்
புதுமை ஏது ?
மது எது ?
அவசர உணவு ஏது ???

என்னால் புதுமையை தேடி
முதுமை அடைகிறான் விரைவில்…

அகவை 120 என்பதெல்லாம்
நான் இல்லாத அந்த காலம்

இப்போதோ ? அப்போதோ என்பது தான்
இந்த காலம்
ஆம் பஞ்ச காலம் !!

நான் வாழ்கிறேன் ,வாழ்வேன்
மனிதன் புதுமையை தேடி அலையும் வரை .............


இப்படிக்கு
-பஞ்சம்

எழுதியவர் : விஜிமோகனவேல் (30-Aug-13, 3:52 pm)
Tanglish : en peyar pancham
பார்வை : 627

மேலே