பஞ்சம்
"அன்புள்ள மனிதருக்கு,
பஞ்சம் எழுதும் மடல்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
நான் உன்னோடு இருக்கையில்
உறவுகள் உன்னைச் சூழாது.
மயங்கி வயிற்றுப்
பசிக்கு ஏங்கும் உன்
குலவ்தைக்குப் பால் கொடுக்க
இயலாமல் தவிக்கிறாள்
உன் மனைவி.வைரம் வைடூரியத்தின்
மதிப்பினை விட
நெற்பயிரின் மதிப்பினை அறிவாய்.
கூக்குரல் சப்தத்தில் புன்னகையும்
அபாய ஒலியாக உணர்வாய்.
சிறுதுளியைக் கூட அமிழ்தமாய்
எண்ணுவாய்.
கருநிற மேஹத்தினைக் கண்டு
ஆச்சரியப்படுவாய்.
விளைச்சல் நிலம் யாவும் மலட்டுத்
தன்மை அடைந்ததை
எண்ணி
வேதனைப்படுவாய்.
உன்னில்லிருந்து வரும் வியர்வைத்
துளிக்கு மதிப்பு தருவாய்.
மூட்டை தூக்கும் தொழிலாளியோ
உனக்குப் பெரிய
செல்வந்தனாகத் தெரிவான்.
இத்தனை மாறுதல்களையும் நீ
உணர்வாய் மனிதா,
நான் உன்னோடு இருக்கும்போது........
இப்படிக்கு,
பஞ்சம்.