ஒரு தாயின் ஏக்கம்
பேசாத என் குழந்தையும்
பேசியது ஓவியமாய்,
அன்பை வெளிப்படுத்தியது
அழகான ஆனந்தக் கிறுக்கலில்...
குழந்தையிடம் கேட்டபோது
இவ்வோவியமோ நான்
அதனுள்,
விழுந்தபோது காயத்திற்கு முத்தமிட்டு
குணப்படுத்தும் நீயும் (அம்மாவும்)
சிறுகுழந்தையாகவே மாறி
மண்ணையும் அடிக்கும் அப்பாவும்,
என்று தன் சிலிர்க்க வைக்கும்
சினுங்களில் சொன்னாள்...
நின்று கேட்டேன்
நிமிடம் கூட நகரவில்லை...
என்ன தவம் செய்தேனோ
என் கருவறையில் நீ பிறப்பதற்கு,
என்ன தவம் செய்ய வேண்டும் சொல்
உன் ஓவியத்தின் அடியில் என்னைப் புதைப்பதற்கு ,
மண்ணோடு மண்ணாய் சேர அல்ல
உன் ஓவியத்தின் கீழ் காவியமாய் வாழ...
-ஏக்கத்தோடு ஒரு தாயின் குரல்...

