குலத்தார்

ஓர் ஊரில், ஒரு புளுகுமூட்டை இருந்தான்.
அவனுடைய தொழிலே எதற்கெடுத்தாலும்
புளுகுவதுதான். இதைப் பெருமையாக வேற
நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தான்.

ஆனால், இதற்கு நேர் எதிரான குணங்களோடு...
ரொம்ப சாதுவாக, பயந்த சுபாவத்துடன்
வளர்ந்தான் அவனுடைய 12 வயது மகன்.

இது, அப்பன்காரனை ரொம்பவே வெசனப்பட
வைத்தது, “ஐயோ, புளுகத் தெரியாம இப்படித்
தறுதலையா திரியுறானே! நம்ம குடும்பத்துப்
பெருமையைக் கெடுத்துடுவான் போலிருக்கே!
என்று சொல்லி, மகனை அடிக்கவும் செய்தான்.

’அப்பா அடித்து விட்டாரே...’ என்கிற
கவலையிலும், யோசனையிலும் மகன் மூழ்கிக்
கிடக்க, அவனைப் பார்க்க அப்பன்காரனுக்கு
பாவமாகிவிட்டது.

பையனை குஷிப்படுத்துவதற்காக, தன் தோள்
மீது அவனை உட்கார வைத்துக் கொண்டு,
அடுத்த ஊர் திருவிழாவுக்கு அழைத்துச்
சென்றான்.

வழியில் ஆறு குறுக்கிட, தண்ணீரில் இறங்கி
அதைக் கடக்க ஆரம்பித்தான். அப்போது,
தண்ணீரிலிருந்து ‘டப்’ என்றொரு சத்தம்.

‘என்னடா சத்தம்?’

”ஒண்ணுமில்லேப்பா! தண்ணியில ‘டப்’னு
கைய விட்டேன். மீன் மாட்டிக்கிச்சு. அதை
அப்படியே பொரிச்சுத் தின்னுட்டேன்!.

மகன் இப்படி சொன்னதைக் கேட்டதும்...
“ஆகா நம்ம குலப்பெருமை அழியாதுடா மகனே!”
என்று சந்தோஷத்தில் ஆட்டம் போட்டானாம்
அப்பன்

--------------------------------
இது எப்படி இருக்கு...!!

எழுதியவர் : பிதொஸ் கான் (3-Aug-15, 4:21 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 112

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே