பிள்ளையாரும் பெரியாரும் ஒன்னு

பிள்ளையாரும் பெரியாரும் ..

உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே மாம்பழம் என்று பார்வதியும் சிவனும் பிள்ளையாரிடமும் முருகனிடமும் சொல்ல இதோ உடனே உலகத்தை சுற்றி வருகிறேன் என்று சொல்லிவிட்டு முருகன் தன் மயில்வாகனத்தில் ஏறி வழக்கம் போல் ஊர் சுத்த கிளம்பிவிட்டார் ..

ஆனால் பிள்ளையாரோ அம்மையும் அப்பனும்தான் உலகம் என்று சொல்லி சிவன் பார்வதியை சுற்றி வந்து மாம்பழத்தை பெற்று விட்டார்...

பிள்ளையாரும் ஒரு பகுத்தறிவாளர்தான் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சாட்சியாகும்...

நாளை பிள்ளையாருக்கும் பெரியாருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பது எதேச்சையான நிகழ்வாக எனக்கு தோன்றவில்லை..

பகுத்தறிவு மறந்த மக்களுக்கு பகுத்தறிவு பாடம் நடத்த மீண்டும் இந்த உலகில் பிறந்த பிள்ளையாரே.. பெரியார் ஆவார்...

அதனால்தான் தன்னை சிலையாக செய்து கடலில் தூக்கி போட்டு இந்த மக்கள் பகுத்தறிவின்றி இப்படி அறியாமையில் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறார்களே .. இவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்பதற்காகவே பெரியார், பிள்ளையார் சிலையை உடைத்தார் ...

தன் பெயரை சொல்லி பக்தி பகல்வேஷமாக மாறி மக்களை மோஷம் செய்து ஏய்த்து பிழைக்கும் கோமாளித்தனத்தை அறவே ஒழிக்கவே கடவுள் இல்லை என்ற கோஷத்தையும் பெரியார் போட்டார் ...

மீண்டும் சொல்கிறேன் பிள்ளையார்தான் பெரியாராக பிறந்து இருக்கிறார்.. அதனால் பெரியாரை வணங்கினால் பிள்ளையாரையே எல்லோரும் வணங்கியதற்கு ஈடாகும் ...

அதனால் பிள்ளையாரும் பெரியாரும் ஒன்னு .. இதை அறியாதவன் கண்ணுல புண்ணு !

எழுதியவர் : செல்வமணி ( முகநூலில்: பாலச (17-Sep-15, 9:54 am)
பார்வை : 124

சிறந்த கட்டுரைகள்

மேலே