குற்றம் செய்யின் தண்டனை

குற்றத்திற்கு தண்டனை....

குற்றம் புரிந்தவன் தண்டனைக்கு உட்படவேண்டும். இதுதான் நியதி.... தான குற்றம் செய்தால் தண்டனை உண்டு என்ற பயம் இருந்தால் தான் குற்றங்கள் குறையவும் ஒரு நாள் மறையவும் வாய்ப்பு உள்ளது.

சிறு பிள்ளை ஒரு தவறு செய்கிறது என்றால்,, அதை தட்டி கேட்கும் பொழுதுதான் மறுபடி அதே தவறு செய்ய முற்படும் பொழுது தான் திரும்பி அந்த செயலை செய்தால் நமக்கு திட்டு அல்லது அடி விழும் என பயந்து செய்யாது

திருடர்களுக்கு தண்டனை இல்லை என்றால் திருந்துவது எப்படி???
சிறு தவறு செய்யும்பொழுது தண்டிக்கப்படவில்லை என்றால் பெரிய குற்றம் செய்ய கட்டாயம் வாய்ப்புள்ளது...

உதாரணத்திற்கு அலுவலகத்தையே எடுத்துக்கொள்வோம்..

மேல் அதிகாரியின் கீழ் வேலை செய்பவர், தவறு செய்தாலோ அல்லது அடிக்கடி அலுவலகத்திற்கு நேர தாமதமாக வந்தாலோ அதற்குரிய அபராதத்தை செலுத்த வேண்டும்., இல்லை என்றால் அந்த சிறு தவறே பெரிய சாம்ராஜியத்தை அழிக்க காரணமாகவும் அமையலாம்....

சிறியதாய் இருப்பின் திருத்துவது சுலபம்... வளரவிட்டால் நமக்குத்தான் வேதனை...

அந்தந்த குற்றத்திற்கு ஏற்ப தண்டனை விகிதல் மிகவும் அவசியம்.... அதை கடை பிடிப்பதும் முக்கியம்..... மனிதன் மனிதனாய் வாழவேண்டும் என்றால் , குற்றங்களுக்கு தண்டனை இன்றி அமையாதது ......

நல்லதொரு சமுதாயத்தை அமைப்போம்......மனிதகுலம் வாழக...

திருமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : திருமதி. மைதிலி ராம்ஜி (7-Oct-15, 12:06 pm)
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே