தெரியவில்லையா

மலர்ந்திருக்கும் மலரின் மணம்
காற்றுக்குத் தெரிவதில்லை....
கடல் எவ்வளவு ஆழம் என்று
நீருக்குத் தெரிவதில்லை....
தன்னால் எரிக்கப்படும்
பொருளின் தன்மை
என்னவென்று
நெருப்புக்குத் தெரிவதில்லை....
தான் எவ்வளவு உயரத்தில்
இருக்கிறோம் என்று
ஆகாயத்திற்கு தெரிவதில்லை....
எல்லோரையும் ஏன்
சுமக்கின்றோம் என்று
நிலத்திற்கு தெரிவதில்லை....
என் கண்களில்
பொதிந்திருக்கும் காதல்
என்னவனே....
உனக்கு தெரியவில்லையா.....?

எழுதியவர் : நித்யஸ்ரீ (22-Jan-16, 11:45 am)
Tanglish : theriyavillaiyaa
பார்வை : 93

மேலே