சிறுகதை - பாழா போன முனுசாமி

ஊருக்குள்ளே புழுதியை கிழப்பிக் கொண்டு வேகமாக ஒரு கார் வந்து நின்றது,காரின் உள்ளே இருந்தது கோவிந்தன்

கோவிந்தனா இப்படி ஒரு காரிலேயா அடேங்கப்பா, போன மாதம் வரை யார் கிட்ட கடன் வாங்கலாம்னு எதிர்த்த வீட்டு தின்னைல படுத்துக்கிட்டு போர வாரவங்கள வேலையே இல்லாம கேள்வி கேட்டுட்டு இருந்த பைய ஏ,சி வீடு பத்தாதுனு சித்திரை வெயிலில் ஆடி கார்ல வேற வந்திருங்குறானே

டேய் கோவிந்தா

என்ன முனுசாமி

கார் யாருது

இது நா புதுசா வாங்கிருக்க ஆடி கார் ,

இது எல்லாமே உன்னோடதா ,இது எல்லாத்தையும் எப்படி வாங்கினே

அது ஒன்னுமில்ல முனுசாமி ,நம்ம ஊருக்கு பக்கத்துல புதுசா ஒரு பேங்க் வந்திருக்குல அதுல பத்தாயிரம் ரூபா போட்டா மாசம் மாசம் ஆயிரம் ரூபா வட்டி கிடைக்கும் , அது மட்டுமில்ல நாம எத்தன பேருத்த அந்த பேங்ல பணம் போட வைக்கிறோமோ அத்தன ரூபா மாசம் மாசம் கமிசனா வட்டியோடு சேர்த்து குடுத்துடுவாங்க
அப்படித்தா நானும் நிறையா பேருத்த சேர்த்து விட்டிருக்க அதுல வந்த கமிஷனயைும் வட்டியையும் வச்சுத் தான் இத்தனையும் வாங்கினே ,


பின்னாடி கோவிந்தா கோவிந்தா என்று யாரோ ஒருவன் கத்திக் கொண்டே ஓடி வருகிறான் ,அது கோவிந்தனின் அல்லக் கை

என்னடாச்சு ஏ இப்படி மூச்சிறைக்க ஓடி வர

அண்ணே நீங்க வட்டி அதிகமா தராங்கனு ஒரு பேங்க்ல பணம் போட்டிருந்தீங்கள ,அந்த பேங்க் கார அத்தன பணத்தையும் சுரூட்டிட்டு ஓடி போயிட்டானாம் , ,கமிஷனுக்கு ஆசை பட்டு நீங்க நா கேரண்டி னு சொல்லி நிறையா பேருத்த அந்த பேங்க்ல பணம் போட வச்சீங்கல
அவங்க பணத்தையும் பேங்க கார சுரூட்டிட்டு போயிட்டானாம் ,இது தெரிஞ்சு பொம்பலைக ஊர் காரங்க எல்லாம் உங்கள அடிக்க செருப்பையும் சீவ கட்டையையும் எடுத்துட்டு ஓடி வராங்க

முனுசாமி ; கோவிந்தா கோவிந்தா
-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (7-May-16, 11:16 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 352

மேலே