காதல் பறவைகள்
அன்பு என்னும் கூட்டினிலே
ஒரு இதயம் கொண்ட இரு பறவைகள்
இன்ப நதியில் குளித்து
இரவு மழையில் நனைந்து
காதலின் கதகதப்பை கார்இருள் மறைக்க
தேக்கி வைத்த காதல் எல்லாம் தேனாய் இனிக்க
நெஞ்சுகுழியை முத்தம்மிட ஒரு குஞ்சு புறா பிறந்தது..
பாசம் ஒன்றே பாலம் இங்கே,
வாழ்வின் வாசம் இன்னும் மாறவில்லை.
வாழ்க்கை ஓடம் இன்பமாய் மிதக்க,
இருவரும் போடும் துடுப்புத்தான் நம்மின் இதயதுடிப்பு..
இந்த மகிழ்ச்சி மழை,
இந்த ஆனந்த அருவி,
இந்த அன்னியோன்ய ஆறு,
என்றுமே சந்தோஷ கடலில் சங்கமம்....!

