கடவுளை காண முடியுமா

டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிபுரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் இரண்டு பேர் பேசிகொண்டிருந்ததை கவனித்தார்.

‘கடவுளை காண முடியுமா?’ என்று ஒருவன் கேட்க,

‘ஓ முடியுமே உன் கோட்டை கழற்றி விட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார்’ என்றான் மற்றவன்.

அவனும் அப்படியே செய்து திரும்பி வந்து பிரகாசமான முகத்துடன் ‘தாங்க்ஸ். நீங்கள் என் கண்களை திறந்து விட்டீர்கள்; கடவுளை நன்றாக பார்க்க முடிந்தது’ என்றானாம்.

இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அரசு அலுவலர் கடவுளை பார்த்தவனை அணுகி எனக்கும் பார்க்க வேண்டும் என தன் கோட்டை கழற்றி அவனிடம் தந்துவிட்டு பத்தடி முன்னால் சென்று பார்த்தார். காக்காய் கூடு கட்டிய டெலிவிசன் ஆன்டென்னாக்களை தவிர ஏதும் தெரியவில்லை. திரும்பி பார்த்தால் அவர்கள் இருவரையும் காணவில்லை. கோட்டையும் காணவில்லை. கோட்டில் அந்த மாத சம்பளம்…….

கடவுள் இருக்கின்றாரா? என்ற நூலில் எழுத்தாளர் சுஜாதா.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (5-Sep-16, 10:31 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 197

மேலே