ஹைக்கூ முயற்சி 4

பாதவேர்கள் பூத்துவிட்டது..
விழியில் புன்னைகைமொட்டுகள் காத்திருக்கின்றது
அவள் வரவிற்காக….!

அவள் பெயரைக்
கோர்க்கும் எழுத்துக்களிலும் ஒட்டிக்கொள்கிறது
அழகான கர்வம்..!

சாமானியர்களின் வெள்ளை உதிரங்கள்
கோமானியர்களின் செருப்பில் வைரங்களாய்...
கறுப்புப் பணம்..!

எரிப்பவனைப் பார்த்து
தின்பவன் சொல்கின்றான்
நீச்சனென்று..!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (13-Nov-16, 11:20 pm)
பார்வை : 354

மேலே