ஈழம் பாடாத இதயம் / ஈழம் பாடாதோன் ஏன் ?

முப்பது கோடி முகமடை தாயாம்-அவளின் சிந்தனை அனைத்தும் ஒன்றேயாம்
கோடி முகங்களின் சாயலாம் சில முகம்
தென் கோடியில் தவிக்கிறது கண்டீரோ ?
சிந்தனை ஒன்றான இவளின் சிந்தனையில்
சிகரம் தொடும் நெருப்புச் சீறுதல் வேண்டாமா ?
தம் பிள்ளை இருளில்,தனலில் தவிப்பது கண்டு
பொறி விழுகிறது அதுவும் பொசுங்கி போகிறது!
“பொறுத்தார் பூமியாள்வார்” என போலிப்
பொறுமை கொண்டாயோ ?
இந்தியத் தமிழனின் மறு இருதயம்-அச்
சிங்களத் தமிழனின் கதறல்-கொடும்
சிங்களக் காற்றில் கரைந்து போகிறதோ ?
கடல் தாண்டி உன் காதில் விழவில்லையோ?
ஆண்டாண்டு காலம் கிடந்த அடிமை நீக்கிவிட்டாளாம் “ இந்தியத்தாய் ”!
அவள் பிள்ளைகள் அடிமையாய் அழிகையில் இவள்
அரிதாரம் பூசுதல் அடுக்குமோ?
அடுத்தவனுக்கு அடி விழுகையில் ஆவேசம் பொங்கும் இதயத்தில்
அலைகடல் அப்பால் இனம் அழிவதில் அக்கறை
இல்லாதது ஏனோ ?
ஈழம் பாடாத இதயம்-இறைவன்
இரும்பில் வடித்த வீண் விரயம் !!!

எழுதியவர் : (14-Jul-12, 10:05 pm)
பார்வை : 293

மேலே