ஒருதலை காதல்

பெண்ணே !



காதலுக்கு கண்கள் இல்லை

ஆனால் தன் கண்மணியை பார்த்தால் மட்டும்

அது மௌனமாய் தூது பேசும்....




காதலுக்கு காலநேரம் இல்லை

ஆனால் தன் உடையவளுக்காக நாள் கணக்கில்

நின்ற இடத்திலேயே சுகம் காணும்....




காதலுக்கு தூக்கம் இல்லை

ஆனால் தன் தேவதையுடன் கனவு காண

கற்பனைகளை தட்டி தாலாட்டு பாடும்....




காதலுக்கு பேதம் இல்லை

ஆனால் தன் இனியவள் பேசிய வார்த்தைகளை

கோர்த்து கவிதைகளாய் வடிக்க தோணும்....





காதலுக்கு திசைகள் இல்லை

ஆனால் தன் இளவரசி இருக்கும் இடத்தில்

குடிசை போட்டு வாழ தூண்டும்....




காதல் ஒன்றும் கடவுள் இல்லை

ஆனால் தன் காதலியின் மனதில் தான் இருப்பது தெரிந்தால்
உயிர் இல்லாமல் வாழும் தேகம் !!.....


எழுதியவர் : முருகு கார்த்திக் (13-Mar-10, 3:51 am)
Tanglish : oruthalai kaadhal
பார்வை : 2468

மேலே