விமர்சன வீதியிலே!!!
வார்த்தைகளின் ஜன்னல்களில்
வாழந்துவிட்டு போகிறேன்!
எதுகை மோனைகளில்
ஏரியும் பார்க்கிறேன்!
சந்தங்களின் சந்துகளில் எல்லாம்
தேடுகிறேன்!
நயங்களின் நரம்புகளை எல்லாம்
இழுக்கிறேன்!
புதுமையின் புன்னகையில் எல்லாம்
புதைகிறேன்!
மரபின் மடியில் தான் மாய்ந்து விடுகிறேன்!
இதோ! இந்தப் பாழ் சமுதாயம்
வாழ மட்டுமா!
வீழவும் விடாது!
எனவேதான் விமர்சன விரிசல்களால்
ஏற்படும் காயங்களில்.....
கரிசனம் இல்லை எனக்கு.