தை மகளே வருக!!! (பொங்கல் கவிதை போட்டி)

முற்றத்திலே கோலமிட்டு
மத்தியிலே பானை வைத்து
ஆவிலே பாலெடுத்து
வயலிலே நெல்லெடுத்து
இனிப்பாக சக்கரையிட்டு
பொங்கல் வழிய காத்திருப்போமே
பாட்டாசு போட்டு மகிழ்ந்திடவே...

உயிர்களிங்கு வாழ்ந்திடவே
உணவு தினம் வேண்டுமிங்கு
உழவர் நமக்கு உணவு தந்திட
கதிரவன் ஒளி கொடுத்திங்கு
உயிர்கள்தனை காத்திடவே
பொங்கல் கொஞ்சம் நாமெடுத்து
கதிரவனை வணங்கிடுவோமே...

தைமகள் வந்திடவே
வழியிங்கு பிறந்திடவே
வானிலே பட்டம் விட்டு
நெற்றியிலே பொட்டுமிட்டு
கையெடுத்து வணங்கிடுவோமே
தை மகளே வருகவென்று...!!!

எழுதியவர் : jeyananthan (3-Jan-13, 7:01 pm)
பார்வை : 166

மேலே