Jayasheela - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jayasheela
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Oct-2021
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  0

என் படைப்புகள்
Jayasheela செய்திகள்
Jayasheela - எண்ணம் (public)
02-Aug-2022 8:50 am

புவியெங்கும் விதைத் தூவும் பறவை இனங்களே
இம்மொட்டுகளை இங்கு விதைத்தது யார் அறிவீரோ???

காப்பகத்தில்
பிஞ்சுகளெல்லாம் கைதிகளாய்,
தீர்ப்பெழுதியது
காலமும் காமமும் ..!!!!

சிறைவாசி
சிறைக் கம்பியை எண்ணுகிறான்
இப்பூக்களெல்லாம்
ஜன்னல் கம்பியை எண்ணுகிறது..!!!

ஒரே கூட்டில் சிறைப்பட்ட
இக்குஞ்சுளுக்கு...

தலைசாய்த்திட தாய்மடியில்லை
தரையே
தலையணையும் தாய்மடியுமாய்..!!!

உணவும் உறைவிடமும்
இலவசம்
உணர்வுகளும் கனவுகளும்
அடுப்பில்..!!!

நேசிப்பாரில்லா இம்மலர்களெல்லாம்
அரசியல்வாதிகளின்
பிறந்தநாளுக்கு விளம்பரம்
கட்டணமாய் ஒருவேளை சாப்பாடு...!!!

கலியுகமிது
வேலியே பயிறுகளை மேய்கிறது
வேலியில்லா
இப்பூந்தோட்டத்தின் நிலையென்ன..!!!


இல்லையென்று வருந்துவோரெல்லாம்
வாருங்களிங்கே
ஆயிரம் குரல்கள் அம்மா என்றழைக்க
ஆயிரம் கரங்கள் கண்ணீரை துடைக்க..!!!

இக்கண்ணீர் பூக்களுக்கு
அன்பை காணிக்கையாக்குங்கள்..!!

மேலும்

Jayasheela - எண்ணம் (public)
01-Aug-2022 10:10 pm

மண்ணு வீட்டுல

தென்னங்கீத்து காத்துல!

எராளனம் வீட்டுல இறங்கி வந்த
மழைத்துளி!
என் வீடு பாத்து வந்த அழையா விருந்தாளி..

ஈரக் காத்துதான்!
நீரு ஊத்துதான்!

பலத்த காத்து கூறைய மோத...

சுற்றி அடைச்ச கீத்தெல்லாம்  சுத்தமா பறந்துபோச்சி
துணியும் நனைஞ்சி போச்சி
உடம்பும் உறைஞ்சி போச்சி

தூக்கம் தெளிஞ்சுபோச்சி
மழையும் நின்னுப் போச்சி

ஈரத்துணி காய போட்டு
தண்ணி குடிச்சி வயித்த நெரப்பி
நேரம் போச்சி சூரிய எட்டி பாத்தாச்சி
ஊடும் காய
மண்ணு தரையில சாணம் மெழுகி!
அரிசி மாவு கோலம் போட்டு
சாமி எறும்புக்கும் உணவு வச்சோம்!
ஆடு மாடு வெளிய கட்டி
மூடி வச்ச விரகெடுத்து அடுப்புல தீய மூட்டி
சோறு வச்சோம்! குழம்பும் வச்சோம்
வயிறு நிரஞ்சதும் மிச்சத்த
நாயிக்கும் பூனைக்கும் வச்சோம்
அந்த இரவு தா
நொந்த இரவு தா
இருந்தாலும் மீண்டு வருமா?
மீண்டும் வருமா? மழலையாக

மேலும்

கருத்துகள்

மேலே