மண்ணு வீட்டுல தென்னங்கீத்து காத்துல! எராளனம் வீட்டுல இறங்கி...
மண்ணு வீட்டுல
தென்னங்கீத்து காத்துல!
எராளனம் வீட்டுல இறங்கி வந்த
மழைத்துளி!
என் வீடு பாத்து வந்த அழையா விருந்தாளி..
ஈரக் காத்துதான்!
நீரு ஊத்துதான்!
பலத்த காத்து கூறைய மோத...
சுற்றி அடைச்ச கீத்தெல்லாம் சுத்தமா பறந்துபோச்சி
துணியும் நனைஞ்சி போச்சி
உடம்பும் உறைஞ்சி போச்சி
தூக்கம் தெளிஞ்சுபோச்சி
மழையும் நின்னுப் போச்சி
ஈரத்துணி காய போட்டு
தண்ணி குடிச்சி வயித்த நெரப்பி
நேரம் போச்சி சூரிய எட்டி பாத்தாச்சி
ஊடும் காய
மண்ணு தரையில சாணம் மெழுகி!
அரிசி மாவு கோலம் போட்டு
சாமி எறும்புக்கும் உணவு வச்சோம்!
ஆடு மாடு வெளிய கட்டி
மூடி வச்ச விரகெடுத்து அடுப்புல தீய மூட்டி
சோறு வச்சோம்! குழம்பும் வச்சோம்
வயிறு நிரஞ்சதும் மிச்சத்த
நாயிக்கும் பூனைக்கும் வச்சோம்
அந்த இரவு தா
நொந்த இரவு தா
இருந்தாலும் மீண்டு வருமா?
மீண்டும் வருமா? மழலையாக