குரு பிரசாத் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : குரு பிரசாத் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 219 |
புள்ளி | : 26 |
எனது சிறுகதைகள் குமுதம், குங்குமம், கல்கி , பாக்யா போன்ற வார இதழ்களில் பிரசுரமாகி உள்ளன. உருது மொழியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
‘’ நேத்து கூட்டத்துல தலைவர் பேசும் போது ரகளையாமே.. ஏன்.. ?’’
‘’ கட்சி மாறினது மறந்து போய்.. ஏற்கனவே இருந்த கட்சியை தலைவர் புகழ்ந்து பேசிட்டாரு...’’
_________________________________________________
‘’ தலைவரை சந்தேகத்தின் பேரில் தான் கைது செய்து இருக்கிறார்களே தவிர... அவர் நிஜமாகவே ஊழல் செய்தது.. தெரியாது என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.... ‘’
--------------------------------------------------------------------------------
‘’ அமைச்சரே....மன்னர் ஏன் இன்று முழுவதும் டென்ஷனில் இருக்கிறார் ? ‘’
‘’ எதிரியின் காலில் விழுந்து மன்னர் சரண்டர் ஆனதை எவனோ ‘’ யூ டியூப் ல் ‘’ போட்டு விட்டானாம் ‘’
_______________________________________________
‘’ கூட்டணி முடிவு பண்ண தலைவர் ரொம்பவும் அதிகமாத்தான் யோசனை செய்யறர்னு எப்படி சொல்றே ?’’
‘’ தலைவர் முடிவு பண்றதுக்குள்ளே தான் தேர்தல் முடிஞ்சு போச்சே... ‘’
என்
செல்ல மகள்
காதலனோடு
காணாமல்போன
பின்பு தான்
புரிந்தது.....
அன்று
நாங்கள்
ஓடி வந்த போது
பெற்றவர்கள்
கண்ட
வலியும்
வேதனைகளும்.....
‘’ டாக்டர் பட்டம் கொடுத்ததுக்கு ஏன் தலைவர் டென்ஷன் ஆயிட்டாரு?
“ அவருக்கு ‘’ போலி டாக்டர் ‘’னுல பட்டம் கொடுத்துட்டாங்க...”
‘’ மன்னா...ஆபத்து.. எதிரியின் படைகள் நமது கோட்டையை நெருங்கி விட்டன.... ‘’
‘’ அமைச்சரே எதற்கு இத்தனை பதற்றம்....கடந்த வாரம் தான் பதுங்கு குழிகள் எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதே.... “