மன்னார் அமுதன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மன்னார் அமுதன் |
இடம் | : மன்னார் நகரம் - இலங்கை |
பிறந்த தேதி | : 04-Apr-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 11 |
http://amuthan.wordpress.com/
http://mannaramuthan.blogspot.com/
மற்றவனுக்கு கிடைத்தது விட்டதே என்று
மனிதன் பொறாமை கொள்ளாத ஒன்று மரணம்
தலை கிறுகிறுக்க அருகில் இருந்த பிளாஸ்டிக் கதிரையை பிடித்தாள். கதிரையில் ஒட்டியிருந்த செலோடேப்பில் ஈரக்கை பட்டு வழுக்கியது. கதிரை சாய்ந்துவிட நெற்றி போய் சுவரில் மோதிக்கொண்டது. வலித்த நெற்றியைத் தடவியபோது விரலில் இரத்தம் பிசுபிசுத்தது. சுவரோடு சாய்ந்து கொண்டாள். கால்கள் வலுவற்று தரையில் நிலைகொள்ள மறுத்தன. அப்படியே இருந்துவிட்டால் சுகமாயிருக்கும் போலிருந்தது. அது ரணமாகவிருந்தாலும் வேறு வழியில்லை….. சிறிது நேரம் அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். உதவிக்கு ஆளில்லாத வீட்டில் எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பாள் எனத்தெரியாது. ‘முழிப்பு வந்தபோது பசித்தது. எழுந்துகொள்ள முடியாதபடி கால்கள் வலித்தன. பி
தன்னம்பிக்கையை
எழுதி எழுதித்
தேய்ந்திருந்த
தாத்தாவின் ஆணி
எப்போதும்
தலைகுனிந்தே நின்றது
மையைத் தின்று
வாழ்க்கையைக்
கக்கும் கருவிக்கு
சால்வையும் சும்மாடும்
தோள்சுமையென்றவன் தாத்தா
எவனாகவும் அடையாளப்படாத
எவனாகவும் அறியப்படாத
எவனுக்கும் அடங்க மறுத்த
தேசாந்திரிக்கு
ஊர்கூடிக் கூறியது
இந்திரியக் குறைபாடென்று
தடுக்கி விழுந்து
தாத்தா மரணித்த நாளில்
முட்டிய கண்ணீரை
முந்தானையில் மறைத்த
பொன்னம்மாக் கிளவி
பத்திரப்படுத்திக்கொண்டாள்
ஆணியையும் ஏடுகளையும்
– மன்னார் அமுதன்