Abdurrahman - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Abdurrahman |
இடம் | : Srilanka |
பிறந்த தேதி | : 21-Apr-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
Abdurrahman செய்திகள்
பெளர்ணமி இரவில்
நகர வீதியில்
நடந்து செல்கையில்
பல மாடி வீடுகளை வெறுக்கின்றேன்,
நிலாவின் ரசிகனாய்.
அமாவாசை இரவுகளில்
அதே தெருக்களில்
தனித்து திரிகையில்
அவ் வீடுகளை நேசிக்கிறேன்,
நிலவினை பிரிந்தவனாய்.
நீ வேண்டுமென்று கேட்டேன்
மழையாகி வந்தாய்
உன் விழி வேண்டுமென்று கேட்டேன்
வானவில்லாகி வந்தாய்
உன் முத்தங்கள் வேண்டுமென்று கேட்டேன்
நிலவாகி வந்தாய்
எதை வேண்டுமென்று கேட்பின்
நீயாகி வருவாய்...
புற்களும்
பூச்செடியாகியது
கற்களும்
மெத்தையாகியது
அவ்வீதியில்
அவள் வரவால்
என் வயதும்
பத்தாகியது
வழியில் முன்னே
நான் நடக்க
என் சுவடு வழி
அவள் நடக்க
ஒற்றையடிப்பாதையும்
பால் வீதியாகியது
அதன் குறுகலும்
தொலைவாகியது
அவ்வீதியில்
அவள் வரவால்
என் மீதியும்
பூரணமாகியது.
கருத்துகள்