பூரணம்
புற்களும்
பூச்செடியாகியது
கற்களும்
மெத்தையாகியது
அவ்வீதியில்
அவள் வரவால்
என் வயதும்
பத்தாகியது
வழியில் முன்னே
நான் நடக்க
என் சுவடு வழி
அவள் நடக்க
ஒற்றையடிப்பாதையும்
பால் வீதியாகியது
அதன் குறுகலும்
தொலைவாகியது
அவ்வீதியில்
அவள் வரவால்
என் மீதியும்
பூரணமாகியது.