காதல்
உடல் இரண்டைப் பிணைத்து இன்பம்
அடலாய்த் தந்து தளர்த்தி மீண்டும்
பிணைக்க தூண்டும் காமம் முடிவில்
உடலோடு மறையும் ஒருபாகம் இது
இதயங்களை பிணித்து ஆன்மாவைக்
காட்டி பேரின்பம் சேர்ப்பது காதல்
உடல்கள் அழிந்தாலும் காதல் என்றும்
அழியா அமரத்துவம் கொண்டது