துணுக்கு கவிதைகள்

மொழி அறியா குத்துபவன்
----------------------------------------
தமிழைத் தவிர
தெரியாத ஒருவன்
தமிழன் என்று
பச்சைக் குத்தினான்
கைகளில் ஆங்கிலத்தில்.

நவீன தொழில்நுட்பம்
--------------------------------
அதிகமாய் படித்தவன்
அகதியாய்
அந்நிய நாட்டில்
பெற்றோர்கள்
தனிமையாய்
சொந்த வீட்டில்

அரசியல் தத்துவம்
--------------------------------
மேடையில்
சாதி ஒழிப்பு
பேசிய தலைவரால்
தனது சாதியின்
ஆட்களே வேட்பாளர்களாய்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நவீன காதல்
------------------------
ஆண் பெண்
இருவரின் காமத்து
இச்சை தீரும்வரை
சேர்ந்து பழகி
சுற்றுவதேயாம்.

வியாபாரம்
------------------------
எவரையும் ஏமாற்ற
பகிரங்கமாய்
விளம்பரம் செய்து
பெரிய கடை வைத்து
பழச்சாறும் தேநீரும்
கொடுத்து எதையும்
பொருந்தா விலைக்கு
விற்பனை செய்வதாம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Apr-21, 10:50 am)
பார்வை : 94

மேலே