திங்கள்

பெளர்ணமி இரவில்
நகர வீதியில்
நடந்து செல்கையில்
பல மாடி வீடுகளை வெறுக்கின்றேன்,
நிலாவின் ரசிகனாய்.

அமாவாசை இரவுகளில்
அதே தெருக்களில்
தனித்து திரிகையில்
அவ் வீடுகளை நேசிக்கிறேன்,
நிலவினை பிரிந்தவனாய்.

எழுதியவர் : Abdurrahman AB (28-Apr-21, 11:52 pm)
சேர்த்தது : Abdurrahman
Tanglish : thingal
பார்வை : 219

மேலே