Chitra - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Chitra |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 0 |
*******************************************
சரக்கை ஏற்றியதும்
வண்டிகள் மட்டுமல்ல
பாதைகளுமிங்கே குடைசாய்கின்றன.
*******************************************
*****************************************************************************************
யாவர்க்கும் இன்பா தலரிதாம் யாவர்க்கும்
தேவர்க்கும் ஒல்லா தது.
பொருள்:
========
அனைவருக்கும் இனிமையானவராக இருத்தல் என்பது அனைவருக்குமே எளிதான ஒன்று அல்ல. இறைவனுக்குமே எளிதானதல்ல அது.
****************************************************************************************
***************************************************************************
வானரம் கைமாலை யாம்தன்னை மற்றொருவர்
சான்றோன் எனகற்கும் கல்வி
பொருள்:
========
குரங்கின் கை மாலை போன்றது ஒருவன் தன்னை பிறரிடம் அறிவுடையோன் என்று காட்டுவதற்காகவே கற்கும் கல்வி.
*****************************************************************************
வழக்கமாக காலையில் நான் கண் விழிக்கும் பொழுது, பறவைகள் மற்றும் அணில்களின் இனிய குரல் ஓசையைக் கேட்டோ, "கீர! கீர!" என்று கூவி வரும் கீரைக்கார அம்மாவின் குரல் ஓசையைக் கேட்டோ, குப்பை வண்டிக்காரரின் விசில் சத்தத்தைக் கேட்டோ கண்விழிப்பது வழக்கம். ஆனால், அன்று காலை ஒரு ஆணின் குரல் தெருவில் நாராசமாக ஒலித்துக்கொண்டு இருப்பதைக் கேட்டு எரிச்சலுடன் கண் விழித்தேன்.
அவன் யாரையோ, தெருவில் வசிக்கும் அனைவரும் காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வசை பாடிக் கொண்டிருந்தான்.
"பொறுக்கி நாய்களா!
தைரியம் இருந்தா இப்ப வெளியல வாங்கடா பாக்கலாம்!
யார்கிட