புதியவன் 1 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புதியவன் 1
இடம்:  Tenkasi
பிறந்த தேதி :  25-Dec-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2021
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  4

என் படைப்புகள்
புதியவன் 1 செய்திகள்
புதியவன் 1 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2021 8:55 am

கடல்கொள்

ஓ மனிதா கொஞ்சம் கடல் கொள் !!!!!!

காலையில் உலகிற்கு ஒளி தருவதில் தொடங்குகிறது என் அரும்பணி !!!

மனதோடு பேசும் மாலைவேளை,
மணலோடு பாதங்கள் பதிக்க, ஆங்காங்கே மழலைகள் குதிக்க,
வருகிறேன் அனைவரையும் சந்திக்க.

சுண்டல் விற்பவர்கள், குதிரை ஓட்டிகள், ராட்டினக்காரர்கள் தினமும் நன்றி தெரிவிக்கின்றார்கள் மனதின் வழியே. என் ஆசியும் பெறுகிறார்கள் அடுத்தநாள் ஆரம்பத்தில்.

மனிதர்களுக்கு பூவாக நுரைகள் மனிதர்களுள் புனிதர்களுக்கு என் சிந்தனைச் சிறைகள். அதன் வரம் அவர்களுக்கே பிடிபடும் - கவலைகள் பொடிபடும்.

பாசம் உண்டு எனக்கு - வாழ்வை என்னுள் முடிக்க எண்ணுவோர்க்கும் பரிசளிப்பேன் அடுத்தநாளை

மேலும்

புதியவன் 1 - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2021 8:43 pm

வயிறு போடுது கூப்பாடு, வேணும் அளவு சாப்பாடு ...
தடபுடலா ஏற்பாடு பக்கத்தில் வாழை சீப்போடு ...
சமைச்ச கைக்கு ஒரு ஓ போடு
ஒருவழியா முடிஞ்சுது ரா பாடு ...

மேலும்

புதியவன் 1 - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2021 2:55 pm

அன்பிற்குரிய அகத்தோனே நீ அன்றாடம்
உள்ளிருந்து அலம்புவ தறிவேன்
என் வாழ்வின் போக்கு கருதி
உன் எச்சரிக்கை எழுப்புமணி சற்றே - என்னுள்
எழும்பி பின்பு எங்கிருந்தோ ஒரு
திடீர் அறிவு என்னுள் தோன்றி
என்னை விழுங்குவ தரிவேன் - ஆசைதான் !
எனக்கும் உச்சாணிக் கொம்பேறி - ஒரு
உய்யார மிட்டு உலகொலிக்க ஆசைதான் !
அப்படியே மேலேறி ஆங்காகே கொடி
நாட்ட ஆசைதான் எனக்கு - என் எண்ணங்கள் களவாடிய எனக்கான பொழுதுகளை எங்கயோ விற்றுவிட ஆசைதான் !
கொஞ்சம் பொறு உலகம் உறங்கட்டும்
அப்பொழுது பேசுவோம் விழித்திருந்து ...

மேலும்

புதியவன் 1 - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2021 2:33 pm

அந்தி சிவந்ததடி கண்ணம்மா
    அறைகூவல் வந்ததடி...!
ஆங்காங்கே நின்ற தென்றல்
    அலைமோதியே தாக்குதடி...!
மொட்டவிழ்ந்த மலர்களது
    வண்டுகளூடே கொஞ்சுதடி...!
கண்கள் அதனை காணுகையிலே
    கானல் உன்னை தேடுதடி...!
காகிதமென உனை எண்ணியே
    உயிர் மையால் தீண்டிணேனே...!
தீண்பொழுதில் வலிக்கும் என்றே
    "உயிர்மெய்"யையும் நீக்கினேனே...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே