அகத்துறையாடல்
அன்பிற்குரிய அகத்தோனே நீ அன்றாடம்
உள்ளிருந்து அலம்புவ தறிவேன்
என் வாழ்வின் போக்கு கருதி
உன் எச்சரிக்கை எழுப்புமணி சற்றே - என்னுள்
எழும்பி பின்பு எங்கிருந்தோ ஒரு
திடீர் அறிவு என்னுள் தோன்றி
என்னை விழுங்குவ தரிவேன் - ஆசைதான் !
எனக்கும் உச்சாணிக் கொம்பேறி - ஒரு
உய்யார மிட்டு உலகொலிக்க ஆசைதான் !
அப்படியே மேலேறி ஆங்காகே கொடி
நாட்ட ஆசைதான் எனக்கு - என் எண்ணங்கள் களவாடிய எனக்கான பொழுதுகளை எங்கயோ விற்றுவிட ஆசைதான் !
கொஞ்சம் பொறு உலகம் உறங்கட்டும்
அப்பொழுது பேசுவோம் விழித்திருந்து ...