அதிசய இந்தியன்

நேரிசை ஆசிரியப்பாக்கள்

கிழக்கிம யநாடு மீசோ ராமாம்
பழக்க வழக்கம் இந்தியர் போலாம்
மங்கோ லியவுரு வமைப்பு கொண்டோர்
எங்கும் மலையும் காடடர்ந் தபகுதி
சீனர் நம்மிடம் அடிக்கடி நம்மிடம்
வீணாய் வாலாட் டுமிடம்
இன்றுநம் வீரர் தயார்நிலை யங்கே

தலைநகர் அடுத்து மவ்ங்கவ்ன் கிராமம்
தலைவன் குவங்கவ்ன் என்பான் கிராமமே
விரட்ட தன்பல தாரங் களுடன்
கிராமம் விட்டு நடுகா டுசென்றான்
தாரங் களுடன் பிள்ளை களுடன்
புதிய வீடுகட் டிவாழ்ந்தான்
இன்று நானூர் குடும்பமாய் நிற்குதே

இந்தமவ்ங் கவ்ன் என்பான் குடும்பமே
சென்னாப் பால்வின் வம்சம் என்பர்
விந்தையா னபேரன் ஜியோனா என்பதாம்
சொந்தமாய் விளைநிலம் காடுகள் இவனிடம
மொத்தம் இல்லைக் கணக்கிலே ராளம்
கட்டினன் இருபது வயதுப்பெண்பதி
னேழ்வய திலேத்தான் மொத்தம் இவனும்
கட்டினன் தாலிமுப் தெட்டுப் பேரின்
கழுத்தில் மூன்றதில் கழன்றோ டியதாம்
எழுபத் தாற்வய துக்கிழ வனுக்கு
எண்பத் தொண்பது பிள்ளை கள்பார்
இன்னும் நூற்றியி ருபத்தாற் பெயரக்
பிள்ளைகள் என்றார் கேளும்
அனைவரின் பெயரையு மிவனும் அறிவனோ

இவனுக் கென்றோர் தனிவீ டதிலே
நூறுப் பகுதிகள் பெரிய அறைகள்
சென்ற வாரம் கடைசி மனைவி
யுடனோர் வாரமே வாழ்ந்தவன் சென்ற
ஞாயிறில் உலக அதிசயம் மாண்டது
நாலடுக் குமாடியின் பெருங்குடிiஇவனே

.......

எழுதியவர் : பழனி ராஜன் (15-Jun-21, 9:44 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே