அந்தியில் அங்கொரு மனம்
அந்தி சிவந்ததடி கண்ணம்மா
அறைகூவல் வந்ததடி...!
ஆங்காங்கே நின்ற தென்றல்
அலைமோதியே தாக்குதடி...!
மொட்டவிழ்ந்த மலர்களது
வண்டுகளூடே கொஞ்சுதடி...!
கண்கள் அதனை காணுகையிலே
கானல் உன்னை தேடுதடி...!
காகிதமென உனை எண்ணியே
உயிர் மையால் தீண்டிணேனே...!
தீண்பொழுதில் வலிக்கும் என்றே
"உயிர்மெய்"யையும் நீக்கினேனே...!