அழிக்க முடியவில்லை

அழிக்க முடியவில்லை!

அவன் காதலை
அவள் மறுத்தபோது
அவளுக்கு
அனுப்பிய குறுஞ்செய்திகள்
கைபேசியில் பேசியவை
முகநூல் முதல் அறிமுகம்
வாட்ஷப்கள் கடிதங்கள்
அழித்து விட்டான்.

அவள்
பூவிதழ் பிரிந்து
பேசிய காதல்மொழிகள்
சிரித்த சிரிப்புகள்
பட்டாம்பூச்சிபோல்
படபடத்த கண் இமைகள்
கடற்கரை மணலில் பதிந்த
நனைத்த மென்பாதங்கள்!

அவன்
இதயத்தில் பதிந்த
நீங்கா நினைவுகள்
அவன் மனதில் இருந்து
அழிக்க முடியவில்லை!

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (15-Jun-21, 12:33 pm)
பார்வை : 224

மேலே