ஜெபாபாக்கியசீலி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெபாபாக்கியசீலி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Nov-2017
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  3

என் படைப்புகள்
ஜெபாபாக்கியசீலி செய்திகள்

                                                          மனித நேயம் 

இன்று காலை கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் ஒரு முதியவர் சாலையில் அடி பட்டு கிடந்தார். சுற்றி எல்லோரும் நின்று அவரை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். ஒருவர் கூட உதவி செய்ய முன் வரவில்லை. சிலர் அவரை பார்த்தும் பார்க்காதது போல் சென்றனர். சிலர் கொஞ்சம் நேரம் வரை அவரை பார்த்து கொண்டே நின்று விட்டு மாணிக்கடிகாரத்தைப் பார்த்த படியே சென்றனர். எனக்கு அங்கு நின்ற எல்லார் மீதும் கோபம் வந்தது. எப்படிப்பட்ட சுயநலமான சமூகம் என்றபடியே நானும் கல்லூரிக்கு சென்று விட்டேன். கல்லூரியில் என்னால் படம் படிக்க முடிய வில்லை. அந்த முதியவரையே நினைத்துக் கொண்டிருந்தேன். கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும்போது அந்த முதியவருக்கு என்ன சம்பவித்தது என்று அங்குள்ளவர்களை கேட்டேன். அவர்களோ: அந்த முதியவருக்கு யாரும் உதவாதத்தால் காலையே இறந்துவிட்டதாக கூறினார். எனக்கு இந்த மனிதர்கள் மீது கோபம் கோபமாக வந்தது, ஒருவருக்கு கூட உதவும் எண்ணம் இல்லையே என்று. வழியெல்லாம் அவருக்கு உதவாத மனிதர்களை திட்டி கொண்டே சென்றேன். நான் அவர்களில் ஒருத்தி என்பதை மறந்து!!!

மேலும்

                                       கடன் 
உன் பார்வையை தானே கடனாக வாங்கினேன்,
அதற்காக என் இதயத்தை எடுத்து கொண்டாயே.......
வட்டியாக!!!!

மேலும்

ஜெபாபாக்கியசீலி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2017 3:15 pm

மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று கண்டப்பாக உள்ளது.
அதையே நாம் கடவுள் என்கிறோம்.
சிலர் அறிவியல் என்கின்றனர்.
நம்பிக்கை உள்ளவனுக்கு அவன் கடவுளாகவும்
நம்பிக்கை இல்லாதவர்க்கு அவன் இல்லாதவனாகவும் தெரிகிறான்.
எது எப்படியோ மனிதன் தன் தேவைக்கு தான்
கடவுளை கூட அழைக்கிறான் , பயன்படுத்துகிறான்.

மேலும்

ஜெபாபாக்கியசீலி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2017 2:54 pm

முதல் பார்வையிலே
உன் கண்களால் நான் விழுந்தேனா..........
அல்லது உன்னை பார்த்ததால்
என் கண்களால் நான் விழுந்தேனா .......
எனக்கு தெரியவில்லை!
நீயே சொல் என் கண்மணி!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே