கார்த்திக் கணேசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திக் கணேசன் |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 10-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-May-2014 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 5 |
பெண்ணே உன் கண்ணீர்
என் நெஞ்சை மாற்றும்
என்னை காயமாக்கும்
உன்மீது பரிதாபம் கொள்ளச்செய்யும்....
ஆனால் பெண்ணே
உன்னை பலவீணபடுதும்....
பெண்ணே உன் கண்ணீர்
உன் உண்மையான
தோழி அல்ல...
உன் உண்மையான
தோல்வி தோழி...
விழித்தெழு
விடியல்
உன் கண்ணீரில் இல்லை...
உன் மன உறுதியில் உண்டு....
வானாந்திர தேசம்..
வனம் போல மனசு..
வன்மம் தவிர்த்து அன்பு
பாசம் கொண்டு யாரோ
கட்டிய கூட்டில்.....
சிறு பறவைகள் நாங்கள்
சிறு சிறு ஆசைகளை..
சிறு சிறு கனவுகளை...
பகிர்ந்துக் கொண்டோம்...
இனி
இந்த வானாந்திரம் எங்களுடையது...
இந்த தேசாந்திரம் எங்களுடையது..
இந்த கூடு எங்களுடையது...
இந்த ஆசை எங்களுடையது..
இந்த கனவுகளும் எங்களுடையது...
நாங்கள் அரசாளுவோம்...இது
எங்கள் கோட்டை...
எங்கள் அன்பிலே ஆளுவோம்
இந்த உலகை....
கயல்
அழுது பிறண்டு
தவழ்ந்து எழுந்து
விழுந்து நடந்து
ஓடி ஆடி
முக்காலில் தடுமாறி
நான்கு காலில் நடையின்றி
எட்டு காலில் பயணத்தை முடிக்கும்
எலும்பும் சதையும் இரத்தமும் கொண்ட
நானும் ஒரு மிருகம் தான் நான்
காதலில்லாமல்....
சர்வயோனி
எதையும் எதிர்பார்க்காத பாசம்
சொர்க்கம் தராத நிம்மதி மடி தூக்கம்
அன்புடன் கூடிய முத்தம்
பாசத்துடன் ஊட்டும் சோறு
நேசத்துடன் கோதும் முடி
நட்புடன் தரும் தோல்
கவலை போக்கும் அரவணைப்பு
சேலை வணைப்பில் துவட்டிவிடும் தலை
அக்கறையுடன் பேசும் பேச்சு
இன்னும் பல...
இதனால் என் காதலி
நீயும் என் தாயே...
i love you forever.....
சர்வயோனி